×

ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு, ஜூலை 19: ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா 28.7.2025 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, 28.7.2025 திங்கட்கிழமை அன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்திட 9.8.2025 சனிக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Adiparasakthi Siddhar Peedam Adipooram festival ,Collector ,Sneha ,Chengalpattu District ,Seyyur taluk ,Melmaruvathur… ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...