கோடியக்காடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அரசு அலுவலர்களும் மருத்துவ பரிசோதனை

வேதாரண்யம், ஜூலை 19: வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சியில் உள்ள லயன்ஸ் அரங்கில் கோடியக்கரை, கோடியக்காடு ஊராட்சி களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் முகாமில் இடம் பெற்றது. இம் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

இம்முகாமில் திட்ட அலுவலர் பாலமுரளி, வட்டாட்சியர் வடிவழகன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்மணி, சுப்பிரமணியன்,சமூக ஆர்வலர் அனந்தராமன் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சரவணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். குடும்ப அட்டை பட்டா மாறுதல் உடனடியாக செய்யப்பட்டு அதற்கு உரியஆவணங்களைபயனாளிகளிடம் முகாமில் வழங்கினர்.முகாமில் முகப்பில் வாழைமரம் கட்டிமுகாமுக்கு வந்தவர்களுக்கு சந்தனம் பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பொதுமக்கள் மட்டுமில்லாமல் முகாமுக்கு வருகை தந்த பெரும்பாலான அதிகாரிகள் ரத்த அழுத்தம் சுகர் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகளை செய்து கொண்டனர்.உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் அதிகாரிகளும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை செய்து கொண்டது இந்த முகாமின்கூடுதல் சிறப்பாகும்.

The post கோடியக்காடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அரசு அலுவலர்களும் மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: