காலமுறை ஊதியம் வழங்ககோரி தொடக்க கல்வி ஆசிரிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 19: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சித்ராகாந்தி, மாவட்ட செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஆசிரியர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு முதல் வழங்க வேண்டும். உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனே நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post காலமுறை ஊதியம் வழங்ககோரி தொடக்க கல்வி ஆசிரிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: