பொற்பதிந்தநல்லூரில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தா.பழூர், ஜூலை 19: பொற்பதிந்தநல்லூரில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் வராமல் தடுக்க தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவ பணிகள் துறை அரியலூர் மண்டலம் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்- கோமாரி நோய் தடுப்பு திட்டம் 2025-26ன் கீழ் ஏழாவது சுற்று முகாம் நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் கிராமங்கள்தோறும் தற்போது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விவசாயிகளின் வீடுகள் உள்ள பகுதிக்கு சென்று முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமானது வடவார் தலைப்பு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த முகாம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவின்படி, அரியலூர் மண்டல இணை இயக்குனரும், கால்நடை மருத்துவருமான பாரிவேந்தன் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்றது.

பொற்பதிந்தநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமை உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ஆனந்தி கோமாரி நோய் தடுப்பூசி பணியினை ஆய்வு செய்தார். வடவார்தலைப்பு கால்நடை மருத்துவர் பிரேம், உதவியாளர் மகாலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமி்ல் பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வளர்க்க கூடிய பசுக்கள், காளைகள், 4 மாதங்களுக்கு மேல் கன்றுகள் என சுமார் 350 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மாடுகளுக்கு ஏற்படக் கூடிய தோல் கழலை நோய் குறித்தும், கோமாரி நோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இதன் பாதிப்புகள் குறித்தும் அதனை சரி செய்யும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post பொற்பதிந்தநல்லூரில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: