திருவெறும்பூர், ஜூலை 19: திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் குடியிருப்பில் அமைந்துள்ள ஓம் சக்தி பீடம் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 1008 போற்றி சொல்லி மாவிளக்கு படைத்து பூஜை நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்புவளாகத்தில் ஓம் சக்தி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அப்பகுதிப்பு பெண்கள் வழிபாடு பொதுமக்கள் என ஏராளமான செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஓம் சக்தி கோயிலில் பெண்கள் மாவிளக்கு படைத்து பூஜை நடத்தினர்.
இதில் பெல் குடியிருப்பில் உள்ள பெண்கள் மாவிளக்கு ஏற்றி 1008 போற்றி பாடலை பாடி வழிபாடு செய்தனர். கற்பக கிரகத்தில் உள்ள ஓம் சக்தி மாணிக்க நாயகி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பெல் குடியிருப்பில் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெண்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post திருவெறும்பூர் அருகே ஓம் சக்தி பீடம் கோயிலில் மாவிளக்கு படைத்து பூஜை appeared first on Dinakaran.
