- நாமக்கல்
- குமரவேல் பாண்டியன்
- தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறை
- தோட்டக்கலை துறை
- துறையில்
- நவனி
- புதுச்சத்திரம்
- தின மலர்
நாமக்கல், ஜூலை 19: தமிழக அரசின் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்ட செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். புதுச்சத்திரம் அருகேயுள்ள நவனியில் விவசாயி ரவி வயலில், மானிய திட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன வயலை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, கீழ் சாத்தம்பூர் கிராமத்தில் விவசாயி துரைசாமி வயலில் சொட்டுநீர் பாசனம் மூலம், சேனைக்கிழங்கு பயிரிடப்பட்ட வயலை ஆய்வு செய்து சேனைக் கிழங்கு பயிரிடும் முறை குறித்தும், விற்பனை சந்தை வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்ததார்.
காய்கறி சாகுபடி ஊக்குவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தோட்டக்கலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சரால் துவங்கி வைக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தில், பழச் செடி தொகுப்பு பயனாளிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என இயக்குனர் குமரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.
மேலும் அனைத்து மானிய திட்டங்களுக்கான பயனாளிகளை கண்டறிந்து, விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி, கரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தியாகராஜன், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், கலந்து கொண்டனர்.
The post தோட்டக்கலைத்துறை திட்ட செயல்பாடு குறித்து இயக்குநர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.
