×

பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டம்

திருச்செங்கோடு, ஜூலை 19: திருச்செங்கோடு அருகே மண்டகபாளையம் பகுதியில் நடந்த மக்கள் கலந்தாய்வு கூட்டத்தில், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ கலந்து கொண்டு, அப்பகுதியின் அடிப்படை தேவைகள் குறித்த மனுக்களை பெற்று உரையாற்றினார். கூட்டத்தில் கொமதேக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல்செந்தில், மாவட்ட இணை செயலாளர் மயில் ஈஸ்வரன், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் கொங்கு கோமகன், தங்கமுத்து,

நாமக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பூங்கொடி, வர்த்தக அணி செயலாளர் செல்வராஜ், மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் தீரன் சுரேந்திரன், ஒன்றிய துணை தலைவர் சேரன்ரமேஷ், பொறுப்பாளர்கள் விஜய், செல்வராஜ், விக்னேஷ், குமரன் சேகர், செல்லகுமார், செல்வராஜ், சேன்யோ குமார், மேற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜெயக்குமார், செல்வம், மகாலிங்கம், செங்கோட்டையன், ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Mandakapalayam ,CMD General Secretary ,Easwaran MLA ,CMD Namakkal West District ,Secretary… ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி