- படூர், கோவளம் பஞ்சாயத்துகள்
- திருப்பூருர்
- அரசு அதிகாரிகள் பயிற்சி நிறுவனம்
- சிவகங்கை
- விழுப்புரம்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- படூர்,
- கோவளம் பஞ்சாயத்துகள்
திருப்போரூர், ஜூலை 19: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகமையில், பல்வேறு மாவட்டங்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி ஏற்க உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன், ஒரு பகுதியாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 37 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கோவளம் மற்றும் படூர் ஊராட்சிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, கோவளம் ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள், நீலக்கொடி கடற்கரை, கடற்கரை தூய்மைப்பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து படூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சுகாதாரப்பணிகள், மூலிகைப் பண்ணை நூலகம், குடிநீர் தொட்டி பராமரிப்பு, சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு ஆகிய திட்டங்களை பார்வையிட்டனர்.
மண்டல ஊரக வளர்ச்சி விரிவுரையாளர் தங்கராஜ் தலைமையில் வந்த, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவேடு பராமரிப்பு, மகாத்மா காந்தி திட்டப்பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் சுந்தர், படூர் ஊராட்சி தலைவர் தாரா சுதாகர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
The post பயிற்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் படூர், கோவளம் ஊராட்சிகளில் ஆய்வு appeared first on Dinakaran.
