போளூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

சேத்துப்பட்டு, ஜூலை 19: போளூர் அல்லி நகர் நடேசன் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஏழுமலை. இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவி 2 மகன் 2 மகள் உள்ளனர். ஏழுமலையின் இரண்டாவது மகன் விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்து தற்போது மனநிலை பாதிக்கப்பட்டநிலையில் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விக்னேஷ் தன்னுடைய கடைக்கு எதிரே உள்ள பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென விக்னேஷின் அலறல் சத்தம் கேட்டது.

ஏழுமலையின் இரண்டாவது மனைவி தாமரை சென்று பார்த்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு விக்னேஷ் இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர், விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஏழுமலை பார்க்கை வந்து பார்த்தபோதுஅலங்கார விளக்கில் மின்சாரம் தாக்கியது தெரிய வந்தது. இது குறித்து போளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post போளூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: