துவரங்குறிச்சி அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பரிதாப பலி

துவரங்குறிச்சி, ஜூலை 18: துவரங்குறிச்சி அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த செவந்தாம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பன் (70). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் துவரங்குறிச்சிக்கு சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் செவந்தம்பட்டிக்கு திரும்பினார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை முத்துப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் நெய்வேலியில் இருந்து முந்திரி பருப்பு ஏற்றிக்கொண்டு மதுரை சென்று கொண்டிருந்த மினி லோடு ஆட்டோ அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் சுப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். ஆட்டோ சிறிது தூரம் சென்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த 100க்கும் மேற்பட்ட தகர டப்பாவில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட முந்திரி பருப்பு டின்கள் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகிறன்றனர். மேலும் விபத்தில் பலியான சுப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லோடு ஆட்டோவில் அதிக அளவு பாரம் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

The post துவரங்குறிச்சி அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: