திருச்சி,ஜூலை 18: திருச்சி கேகேநகர் அருகே திமுக கவுன்சிலர் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகராட்சி 64வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி ராஜேந்திரன். இவர் கே.கே.நகர் அய்யப்பநகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு நேற்று மாலை வந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பைக்கை அடித்து உடைத்தனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று மாலை சாத்தனூர் மெயின்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகிறார்கள். திமுக கவுன்சிலர் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post மாநகராட்சி கவுன்சிலர் வீடு சூறை appeared first on Dinakaran.
