திருத்துறைப்பூண்டி, ஜூலை 18:திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மு ச பாலு தலைமை வகித்தார். எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி இதில் நான் பெருமை அடைகிறேன். என் பள்ளியை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து செயல்படுவேன்.
பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பைகளை ஏற்படுத்த மாட்டேன். மேலும் எனது சக தோழர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்ப்பணித்துக் கொள்வேன். எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி முயற்சியில் நான் முழு மனதுடன் பங்கேற்பதுடன் எனது நண்பர்கள் உறவினர்கள் சுற்றத்தார் அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். எனது சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன் என்று உறுதிமொழியை மாணவர் சந்தோஷ்குமார் வாசிக்க அனைத்து மாணவர்கள் உறுதி ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ரகு செய்திருந்தார்.
The post கட்டிமேடு அரசுப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு: விண்ணப்பித்து பயன் ெபற அழைப்பு appeared first on Dinakaran.
