- சேலம்
- ஆடி
- சேலம் மாவட்டம்
- சூரமங்கலம்
- Dadakapatti
- அஸ்தம்பட்டி
- அம்மாபேட்டை
- இடைப்பாடி
- Ilampillai
- மேட்டூர்
- Jalakandapuram
- ஆத்தூர்
- தம்மம்பட்டை
சேலம், ஜூலை 18: ஆடி மாத பிறப்பையொட்டி சேலம் மாவட்ட உழவர்சந்தைகளில் 321 டன் காய்கறி, பழங்கள் ₹1 கோடியே 30 லட்சத்துக்கு விற்பனையானது. சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, இடைப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர்சந்தைகளில் வழக்கமான நாட்களில் நடக்கும் வியாபாரத்தை விட, அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகும்.
நேற்று ஆடி மாத பிறப்பையொட்டி காய்கறிகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. 13 உழவர்சந்தைகள் மற்றும் சேலம் சின்ன, பெரிய கடைவீதி, ஆற்றோர மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், பால் மார்க்கெட் உள்ளிட்ட தினசரி காய்கறி மார்க்கெட்டில் கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய், வாழைப்பழம், வாழை இலை உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை நடந்தது. மாவட்டத்தில் 13 உழவர்சந்தைகளிலும் ஆயிரம் விவசாயிகள் கொண்டு வந்திருந்த 321 டன் 46 கிலோ காய்கறி, பழங்கள் ₹1 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்துக்கு விற்பனையானது. இக்காய்கறி, பழங்களை 76 ஆயிரத்து 254 நுகர்வோர் வாங்கிச் சென்றதாக சேலம் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 321 டன் காய்கறிகள் ₹1.30 ேகாடிக்கு விற்பனை appeared first on Dinakaran.
