ரூ.21.9 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

இளம்பிள்ளை, ஜூலை 18: இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில், ரூ.2.19 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் பங்கேற்றார்.
இளம்பிள்ளை பேரூராட்சி கஞ்சமலை அடிவாரம், ஊத்துகிணறு பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பில் தார் சாலை மற்றும் பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகே ரூ.45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.54 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம், பாட்டப்பன் கோயில் அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் சுகாதாரம் வளாகம் ஆகிய திட்ட பணிகளுக்கு, மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமையில் பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சந்திரமோகன், வீரபாண்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சதீஷ்குமார், இளம்பிள்ளை பேரூர் செயலாளர் சண்முகம், பேரூராட்சி தலைவர் நந்தினி ராஜகணேஷ், துணைத் தலைவர் ராஜமாணிக்கம், செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இளம்பிள்ளை, கத்தாளப்பேட்டை பகுதியில் உள்ள மயானத்தில் ரூ.1.51 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மின்மயான எரிவாயு தகனமேடை பணியை பார்வையிட்டனர்.

The post ரூ.21.9 கோடியில் வளர்ச்சிப் பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: