பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது

பெரம்பலூர், ஜூலை 18: பெரம்பலூர் மாவட்டத்தில் \”சாதி பாகுபாடற்ற, சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடை பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து, கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து தலா ரூ.1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளதால் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என்று மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், \”சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து தலா ரூ.1கோடி ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள்\” வழங்கப்படும். மேற்கண்ட பரிசுத்தொகை அரசு வழிமுறைகளில் தெரிவித்துள்ள உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும்.

மேற்கண்ட விவரப்படி சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதனை தகுதியுடைய ஊராட்சிகளே தாங்களாகவோ அல்லது பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் (தணிக்கை) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, அதற்கான அனைத்து ஆவணங்களுடன் வருகிற ஜூலை 25ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் இவ்வலுவலத்தில் கிடைக்குமாறு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது appeared first on Dinakaran.

Related Stories: