×

நவீன வேளாண்மை இயந்திரங்கள் கண்காட்சி

நாமக்கல், ஜூலை 18: நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில், நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான மேளா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. வரும் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பாச்சலில் உள்ள ஞானமணி இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த மேளா நடைபெறுகிறது. வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்படும்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள் மற்றும் அவைகளின் பராமரிப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். முன்னணி டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகள் தயாரிக்கும் மஹேந்திரா, ஜான்டீர், நியூ ஹாலண்ட், சுராஜ், விஎஸ்டி, கிர்லாஸ்கர் போன்ற கம்பெனிகள் அரங்குகளை அமைத்து கருவிகளின் பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post நவீன வேளாண்மை இயந்திரங்கள் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Modern Agricultural Machinery Exhibition ,Namakkal ,Namakkal District Agricultural Engineering Department ,Namakkal District ,Collector ,Durga Murthy ,Namakkal District Agricultural… ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி