×

கலெக்டர் அலுவலகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

 

திருப்பூர், ஜூலை 18: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிக்கையின்படி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை 2, போன்ற தொகுதி 2 பணிகளுக்கும் மொத்தம் 645 காலி பணியிடங்களுக்கு வருகிற செப்டம்பர் 28-ம் தேதி முதல் நிலை தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலை தேர்வுக்கான வகுப்புகள் வரும் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு அறை எண் 439-ல் தொடங்குகிறது. மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரை பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

The post கலெக்டர் அலுவலகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...