- ஊட்டி
- நீலகிரி மாவட்டம்
- முதல் அமைச்சர்
- நீலகிரி
- கலெக்டர்
- லட்சுமி பவ்ய தந்திரியு
- வேளாண் பொறியியல் துறை
- தின மலர்
ஊட்டி,ஜூலை18: நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட் மானியத்தில் வழங்கப்படவுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட் தற்போது மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது.
டீசல் இன்ஜின் மூலம் நீர் இறைக்கும் விவசாயிகளுக்கு செலவுகளை குறைக்கும் பொருட்டு விவசாயியின் வேளாண் நிலங்களில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய 5,7.5 மற்றும் 10 என்ற அளவில் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் மானியத்தில் அமைத்துத்தரப்பட்டு வருகிறது.
2025-26ம் நிதியாண்டிற்கு உத்தேச இலக்கு 50 எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு,குறு விவசாயி சான்றிதழ், புகைப்படம்,நுண்ணீர் பாசன விண்ணப்ப எண் ஆகியவை வழங்க வேண்டும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
The post குடியிருப்புவாசிகள் பீதி மானியத்தில் பம்ப் செட் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.
