கோயம்பேடு மார்க்கெட்டில் காரில் வந்து செல்போன் பறிப்பு: 3 பேர் சிக்கினர்

 

அண்ணாநகர், ஜூலை 18: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (53). இவர், கோயம்பேடு மார்க்கெட் உள்ளே வரும் வாகனங்களுக்கு டோக்கன் போடும் வேலை செய்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், பணியில் இருந்தபோது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி, டோக்கன் போட வேண்டும் என கூறியுள்ளார். அப்போது காரில் இருந்த 3 பேர், ‘‘நாங்கள் யார் தெரியுமா, எங்களிடமே டோக்கன் கேட்பாயா,’’ என கத்தியை காட்டி மிரட்டியதுடன், பாஸ்கரின் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதேபோல், சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.400 பறித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், அசோக் நகர் பகுதியை சேர்ந்த தாமு (28), சந்துரு (22), சஞ்சய் (21) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். இதில் சந்துரு, தாமு மீது ஏற்கனவே அசோக் நகர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களிடம் இருந்து கார் மற்றும் 2 செல்போன்கள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post கோயம்பேடு மார்க்கெட்டில் காரில் வந்து செல்போன் பறிப்பு: 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: