×

பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத பணம் பறிமுதல்

 

பல்லாவரம், ஜூலை 18: பம்மலில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சார்பதிவாளர் அலுவகத்திற்குள் வருவதை கண்டதும், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள், பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் அங்கு பணிபுரியக் கூடிய ஊழியர்கள் என அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் கணக்கில் வராத ரூ.38,200 இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சார்பதிவாளர் பால்ராஜ் (பொறுப்பு) என்பவரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் உரிய பதிலளிக்காததால் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Anti-Corruption Department ,Pammal ,Pallavaram ,Chengalpattu District ,Deputy Superintendent ,Saravanan… ,-Registrar ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...