திருப்போரூர், ஜூலை 18: திருப்போரூர் வணிகர் வீதியில் எவர்கிரீன் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வாணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் உஷா குமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்போரூர் காவல் ஆய்வாளர் இராஜாங்கம் பங்கேற்று, காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, பள்ளி மாணவ – மாணவியருக்கான பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, நடனம் போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து செல்போன் பயன்பாட்டை குறைத்தல், படிப்பில் கவனம் செலுத்துதல், போதைப்பொருளை ஒழித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களிடையே காவல் ஆய்வாளர் இராஜாங்கம் உரையாற்றினார். முடிவில் நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.
The post திருப்போரூர் எவர்கிரீன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.
