மதுராந்தகம், ஜூலை 18: அரசு பள்ளி மேற்கூரை விழுந்து மாணவர்கள் காயம் ஏற்பட்டதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வந்து அய்வு நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் வசதிக்காக ரூ.33 லட்சம் செலவில் கூடுதலாக 2 வகுப்பறைகள் சமீபத்தில் கட்டப்பட்டது.
இதில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் புதிய வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென சீலிங் சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்தது. இதில் மாணவர் ரக்ஷித், கோகுல், மாணவிகள் கோபிகா, தேன்மொழி, வைசாலி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
The post மேற்கூரை இடிந்து விழுந்த அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.
