தஞ்சாவூர், ஜூலை 17: தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருப்பதாகவும் அதில் பங்குபெற விரும்புவர்கள் இணையம் மூலம் பதிவு செய்து பயன் பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகின்ற 18.07.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.
இம்மு முகாமில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in //www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்தல் அவசியம். தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள்,ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post தனியார் வேலைவாய்ப்பு முகாம்; இணையம் மூலம் பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.
