- சுவேதா நதி
- Kengavalli
- வித்யா, வித்யா ஏரி
- கடம்பூர் பஞ்சாயத்து
- கெங்கவல்லி தாலுகா
- சேலம் மாவட்டம்…
- தின மலர்
கெங்கவல்லி, ஜூலை 17: கெங்கவல்லி அருகே, கடம்பூர் ஊராட்சியில் விடிய, விடிய ஏரியில் மணல் கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவில் கடம்பூர், ஆணையாம்பட்டி, தெடாவூர், 74.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுவேத நதிக்கரையில் சிலர், இரவு நேரங்களில் மணல் கடத்தி வருகின்றனர். இவர்கள் லோடு மணல் ரூ.4000 முதல் ரூ.6000 வரை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்த புகார்கள் வரும் போது, வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் கனிமவளத்துறையினர் மணல் கடத்தல் வாகனங்களை பிடித்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், இரவு நேரங்களில் தொடங்கி விடிய, விடிய சுமார் 100க்கும் மேற்பட்ட லோடுகள் மணல் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.மணல் கடத்தலை தடுக்க முயற்சி செய்பவர்கள் உயிருக்கு, மணல் கடத்தல் கும்பலால் அச்சுறுத்தல் இருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
எனவே, கெங்கவல்லி பகுதியில் ஆற்று மணல், கிராவல் மண் கடத்தப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சுவேத நதிக்கரையில் மணல் கடத்தும் கும்பல் appeared first on Dinakaran.
