திருமயம், ஜூலை 16: தமிழ்நாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களிடம் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை தமிழ்நாடு முதலமைச்சரின் மு க ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். அது மட்டுமல்லாது பொதுமக்களின் தேவைகள் அறிந்து புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ரகுபதி வழிகாட்டுதலின்படி திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரின் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்து திமுக நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர். இதேபோல் திருமயம் தொகுதி துளையானூர் ஊராட்சி பகுதிகளில் துளையானூர் திமுக ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் கட்சி நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.
The post திருமயம் பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை தீவிரம் appeared first on Dinakaran.
