- நாமக்கல்
- நாமக்கல் வருவாய் கோட்ட அலுவலகம்
- கிரியா முன்னேற்றம்
- கஜாகம்
- பொது
- பாலசுப்பிரமணியம்
- ராம்குமார்
- ரவீந்திரன்
- தின மலர்
நாமக்கல், ஜூலை 17: நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் ராம்குமார், ரவீந்திரன் ஆகியோர் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவன பகுதிகளில், ஏராளமான அனுமதி பெறாத விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தனித்தனியாக மற்றும் குழுவாக தங்கி இருந்து, கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், அனுமதி பெறாத விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. முறைப்படி அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்திய பின்னரும், விடுதிகள் அனுமதி பெறாமல் செயல்படுகின்றன. இதனால் அந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் அனைத்து விடுதிகளையும் உடனடியாக மூட, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
The post அனுமதி பெறாமல் இயங்கும் விடுதிகளை மூட நடவடிக்கை appeared first on Dinakaran.
