கிருஷ்ணகிரி, ஜூலை 17: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2(ஏ) முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், வருகிற 21ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2(ஏ) முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், வருகிற 21ம் தேதி காலை 10.30 மணியளவில் துவங்கப்பட உள்ளது.
இதில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த தேர்வு எழுத, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அலுவலகத்தில் பள்ளி பாடப்புத்தகங்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச வைபை போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தின் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கெள்கிறேன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த இத்தேர்விற்கு தயாராகும் தகுதி வாய்ந்த தேர்வர்கள், இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.
