- அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம்
- திருப்பூர்
- திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
- தமிழ்நாடு அரசு
- சண்முகம்
- மாவட்டம்…
- தின மலர்
திருப்பூர், ஜூலை 17: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். திருப்பூர் வட்ட கிளைத் தலைவர் மகுடேஸ்வரன் துவங்கி வைத்து பேசினார்.
ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து ஓய்வு உயிர்களை நீக்கி வைக்கும் நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும். 4 தொகுப்பாக சுருக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர் வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
மாநில அரசுகள் உடனடியாக ஊதியக்குழுவினை அமைத்திட வேண்டும். மத்திய அரசின் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை, மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்றிருக்கும் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னாள் மாநில செயலாளர் நிசார் அஹமது நன்றி கூறினார். முடிவில் மாவட்ட பொருளாளர் மேகவர்ணன் நன்றி தெரிவித்தார்.
The post அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
