×

கலைஞர் சிலை அவமதிப்பு; பிரபல டாக்டர் கைது

சேலம்: சேலம் 4 ரோடு அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை 16 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் கருப்பு பெயின்ட் ஊற்றப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து பிரபல காது மூக்கு தொண்டை டாக்டரான விஸ்வநாதன்(77) என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், டாக்டர் விஸ்வநாதன் தான் இச்செயலில் ஈடுபட்டது உறுதியானது. குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஒருவர் சேலத்திலும், இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் உள்ளனர். குடும்ப பிரச்னையில் அவர் இருந்து வருகிறார். கடும் மனஉளைச்சல் காரணமாக இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக அவரே கூறுகிறார்’ என்றனர்.

The post கலைஞர் சிலை அவமதிப்பு; பிரபல டாக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Karunanidhi ,Salem 4 Road Anna Park ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...