ஈரோடு, ஜூலை 17: பவானி அடுத்த மைலம்பாடி பகுதியில், கோபி மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த, லட்சுமி நகரைச் சேர்ந்த அம்மாசை (32) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா மிட்டாய் விற்ற, உத்தரபிரதேசம் மாநிலம் ஜாஜம் கடம் மூங் பகுதியைச் சேர்ந்த அர்ஷத் ஜமால் (27), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப்உசேன் (24) ஆகிய இருவரையும் புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடை உரிமையாளர்கள், குறிச்சி குதிரைக்கல்மேட்டைச் சேர்ந்த பூபதி (43), அம்மாபேட்டை அடுத்த பழைய மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த சக்திவேல் (48), கோபி அடுத்த கரட்டுபாளையத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (65) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
The post மது, குட்கா, கஞ்சா விற்ற 6 பேர் கைது appeared first on Dinakaran.

