பெரம்பூர், ஜூலை 17: திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட புகாரில் முன்னாள் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மாற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து, கொளத்தூர் காவல் துணை ஆணையராக குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அருகில் போதை தரும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் தங்கள் குறைகளையும், புகார்களையும் நேரடியாக என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என்றார்.
The post கொளத்தூர் காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.
