செங்கல்பட்டு, ஜூலை 17: விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி உரிய விவரங்கள் மற்றும் பதில்களை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் வருகின்ற 24.7.2025 அன்று காலை 10.30 மணியளவில் செங்கல்பட்டு சப்-கலெக்டர் தலைமையிலும், 21.7.2025 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் மற்றும் 22.7.2025 அன்று காலை 10.30 மணியளவில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் இக்கூட்டம் நடைபெறும். இதில், விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி உரிய விவரங்கள் மற்றும் பதில்களை பெற்று பயன்பெறலாம்.
The post விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் appeared first on Dinakaran.
