×

பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தனியார் கம்பெனி ஊழியர் கைது

 

வளசரவாக்கம், ஜூலை 17: சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ேநற்று முன்தினம் 38 வயது மதிக்கத்தக்க பெண் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, அரும்பாக்கத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கியபோது ஒருவர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார். பின்னர், அந்த நபர் திடீரென ஆபாச சைகை காண்பித்ததால் அதிர்ச்சி அடைந்தேன். எதற்காக என்னை பார்த்து ஆபாச சைகை காட்டுகிறாய் என்று கேட்டபோது அந்த நபர் என்னை மிரட்டினார்.

எனவே, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஸ்ரீதர்(40) என்பவரை கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தனியார் கம்பெனி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Valasaravakkam ,Arumbakkam police station ,Chennai ,Arumbakkam ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...