கோவில்பட்டி, ஜூலை 16: கோவில்பட்டி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை கனிமொழி எம்பி துவக்கிவைத்தார். கோவில்பட்டி நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நேற்று துவக்கியது. சத்யபாமா திருமண மண்டபத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நகராட்சி சேர்மன் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை துவக்கிவைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன், 3 சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு, துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
முகாமில், அரசின் பல்வேறு திட்டங்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் நகராட்சிக்கு உட்பட்ட 35 மற்றும் 36வது வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கினர். பட்டா மாறுதல் உள்ளிட்டவைகள் விண்ணப்பிக்க பொதுமக்களின் வசதிக்காக முகாம் நடந்த தனியார் மண்டபத்திலேயே, தற்காலிக இ-சேவை, ஆதார் சேவை உள்ளிட்ட அரசின் சேவை மையங்களும் செயல்பட்டன.
முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றியச் செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன் மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராமர், பீட்டர், சிவசுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், மாநில தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகராட்சி கமிஷனர் பாலமுருகன், நகரமைப்பு அலுவலர் சேதுராஜன், மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.
