திருச்சி, ஜூலை 16: திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மே 9ம் தேதிதமி ழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இப்பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடா்ந்து இன்று (ஜூலை16) காலை 6 மணி முதல் நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இப்பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு, குறிப்பாக சென்னை, பெங்களூர், ஊட்டி, கோயம்புத்தூர், எர்ணாகுளம், நாகர்கோயில், திருச்செந்தூர், காஞ்சிபுரம், திருத்தணி மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்த நேரத்திற்கு, பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைத்திலிருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
The post முன்பதிவு செய்தவர்கள் பஞ்சப்பூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று முதல் பயணம் செய்யலாம் appeared first on Dinakaran.
