கலெக்டர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் மன்னார்குடி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மன்னார்குடி, ஜூலை 16: பொது மக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ”உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளும் அது போல் கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகை யான சேவைகளும் பெற முடியும். முக்கியமாக இம்முகாம்களில் மகளிர் உரிமையைத் தொகை பெற விண்ணப்பங்கள் பெறலாம் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது.இம்முகாம்களில் பெறப் படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலை யில், சிதம்பரத்தில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற முதலைமைச்சர் முக ஸ்டாலின் ”உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, மன்னார்குடி நகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமை நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் துவக்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், நகராட்சி ஆணை யர் சியாமளா, நகரச் செயலாளர் வீரா கணேசன் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் 1 மற்றும் 2வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மனுக்கள்205, மகளிர் உரிமைத் தொகை கேட்டு 172 மனுக் கள் என மொத்தம் 377 மனுக்களை அளித்தனர். முன்னதாக பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், பூண்டி கலைவாணன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முகாமில், நகர் மன்ற துணைத்தலைவர் கைலாசம் நகராட்சி மேலாளர் மீரான் மன்சூர், நகர் மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், தமிழ்ச்செல்வி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் மன்னார்குடி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: