டூவீலரில் இருந்து தவறி விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம்

கெங்கவல்லி, ஜூலை 16: பெரம்பலூர் மாவட்டம், நூத்தப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். கோவை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது அண்ணன் சிலம்பரசனுக்கு, திருமணம் நடைபெற்றது. இதற்காக ரஞ்சித்தின் நண்பர்களான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சார்கேஸ் (20), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த கார்த்திகேயன் (21), ஜாசீம் (20) ஆகியோர், நூத்தப்பூருக்கு வந்தனர். திருமணம் முடிந்த பின், கார்த்திகேயன், ஜாசீம் ஆகியோரை ஆத்தூரில் பஸ் ஏற்றி விட நூத்தப்பூரிலிருந்து டூவீலரை எடுத்துக்கொண்டு சார்கேஷ் வந்தார். டூவீலரை கார்த்திகேயன் ஓட்டி வந்துள்ளனர். அவருடன் சார்கேஸ், ஜாசீம் ஆகியோர் வந்தனர். வீரகனூர் ஏரிக்கரை வளைவு பகுதியில் வந்த போது, நிலைதடுமாறி டூவீலர் சாலையில் விழுந்ததில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கார்த்திகேயன் பலத்த காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சார்கேஸ், ஜாசீம் ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார்த்திகேயன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வீரகனூர் எஸ்ஐ தினேஷ்குமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

The post டூவீலரில் இருந்து தவறி விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: