×

புதுப்பெண் மாயம் ; போலீசில் புகார்

குமாரபாளையம், ஜூலை 16: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் குமாரபாளையம் குளத்துக்காட்டில் தங்கி மில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தனது மாமா மகள் மோனிசா(18) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இருவரும், குமாரபாளையத்தில் தங்கியிருந்தனர். கடந்த 12ம் தேதி மதியம், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ஞானசேகரன், மனைவியை காணாமல் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தார். தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி, மோனிஷா புறப்பட்டு சென்றதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தனது செல்போன் பதிவுகளை ஞானசேகரன் பார்த்தார். அதில், மோனிசா, இனி என்னை படிக்க வைக்க மாட்டீர்கள், எனது நண்பர் வீட்டிற்கு செல்கிறேன் என பதிவு செய்து அனுப்பி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஞானசேகரன், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுப்பெண் மாயம் ; போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Gnanasekaran ,Vaniyambadi, Tirupattur district ,Kumarapalayam Kulathukadd ,Monisa ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி