×

பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ள நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக உணவுத்துறை அமைச்சர் தலைமையில், சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறாத, குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில், அவர்களது உரிமத்தினை விட்டு கொடுக்க முன்வரும் குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது உரிமத்தினை விட்டு கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் வலைத்தளத்தின் மூலமாக, தங்கள் குடும்ப அட்டையை, பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். எனவே, விருப்பமுள்ள குடும்ப அட்டைதாரர்கள், விளிம்பு நிலை மக்கள் பயன்பெற ஏதுவாக, தங்கள் உரிமத்தினை விட்டுக்கொடுக்க முன்வரலாம்.

மேலும் குடும்ப அட்டை பதிவு, குடும்ப உறுப்பினர்கள் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களின் பதிவுகள், குடிமை பொருள் வழங்கல் புள்ளி விவர தரவின் பதிவில் தொடர்ந்து இருக்கும். இதனால் தங்களுக்கான அனைத்து ஏனைய நடைமுறைகளுக்கு தடை ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள பொதுமக்கள், இதனை பயன்படுத்தி குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ெதரிவித்துள்ளார்.

The post பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ள நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinesh Kumar ,Krishnagiri district ,Tamil Nadu Food Department… ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்