×

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

 

உடுமலை, ஜூலை 16: தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் உடுமலையில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் வரவேற்றார். கௌரவத் தலைவர் நடராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ், துணைச் செயலாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஞானபண்டிதன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். தலைவர் கு.சி.மணி தலைமை வகித்தார். கூட்டத்தில், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓய்வு ஊதியர்கள் சங்க அலுவலக அறையை கடந்த 45 வருடங்களாக பயன்படுத்தி வந்தோம்.

தற்போது பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் ஓய்வூதியர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆவன செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திருப்பதி கோயிலில் உள்ள நடைமுறைப்படி தமிழ்நாடு அறநிலையத்துறை முதல் நிலை கோயில்களில் மூத்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை தந்து தரிசனம் செய்ய ஆவன செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக துணைத் தலைவர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

The post ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Retired Officers Association Executive Committee Meeting ,Udumalpet ,Tamil Nadu Government Retired Officers Association Executive Committee Meeting ,Ponraj ,President ,Natarajan ,State ,Ramadoss ,Deputy Secretary ,Sivaraj ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...