- உடுமலை
- உடுமல
- தாலி சாலை
- Thirumurthimalai
- அமராவதி அணை
- கேரளா
- பழனி
- பொள்ளாச்சி
- Valpara
- Topslip
- தாலி சாலை
- தின மலர்
உடுமலை, ஜூலை 16: உடுமலையில் இருந்து தளி சாலை வழியாக திருமூர்த்திமலை, அமராவதி அணை, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. அதேபோல், பழனியில் இருந்து ஆனைமலை செல்லும் சாலை வழியாக பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப் ஆகிய இடங்களுக்கு அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், தளி முதல் எரிசினம்பட்டி வரை சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையால் சாலை அரிக்கப்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதுபற்றி செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 1-ம்தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் சார்பில் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
The post சேதமடைந்த தளி சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.
