ஆர்.எஸ்.மங்கலம். ஜூலை, 16: தமிழ்நாடு அரசு காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட உத்தரவிட்டது. அதன்படி திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜு தலைமையில், காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டி, மற்றும் பாட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் காமராஜரின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து சிறப்பு செய்தனர்.
இதில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அன்பின் அமலன், ராமதாஸ் மற்றும் இருபாலர் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி செந்தமிழ்செல்வி மற்றும் பலர் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கல்வி வளர்ச்சி நாள் விழா appeared first on Dinakaran.
