சிவகங்கை, ஜூலை 16: சிவகங்கையில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொது செயலாளர் சிஆர்.சுந்தர்ராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சோணை, வட்டாரத் தலைவர்கள் மதியழகன், உடையார், நகர் தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன்,
நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்குமார், மாநில மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவி ஸ்ரீவித்யா, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் சையது இப்ராகிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமைக்கழக பேச்சாளர் தமிழ்பிரியா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post காமராஜர் பிறந்த தினம் appeared first on Dinakaran.
