பரமக்குடி, ஜூலை 16: பரமக்குடி அருகே அரை நூற்றாண்டை கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிக்கு கிராம மக்கள் கல்வி சீர் வழங்கினர். பரமக்குடி அருகே குளவிப்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1957 ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. அரை நூற்றாண்டை கடந்து 68 ஆண்டுகளாகப் செயல்பட்டு வருகிறது. தற்போது இப்பள்ளியில் 24 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு குளவிபபட்டி கிராம மக்கள் சார்பில் இரும்பு மேஜைகள், ஒலிபெருக்கி கருவிகள்,நோட்டு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை கல்வி சீராக கொண்டுவரப்பட்டு தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜிடம் வழங்கினர். கல்வி சீர் கொண்டு வந்த கிராம மக்களுக்கு பள்ளி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அரை நூற்றாண்டை கடந்து செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள் கல்வி சீர் வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post அரசு தொடக்க பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராமமக்கள் appeared first on Dinakaran.
