தொண்டி, ஜூலை 16: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆக.8ம் தேதி நடைபெறுகிறது. பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், இல்லம் தேடி சென்று மனுக்களை பெறும் விதமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சியிலும் முகாம் நடைபெற உள்ளது. ஆக.8ம் தேதி நம்புதாளை ஊராட்சியில் முகாம் நடைபெற உள்ளது.
இதில் நம்புதாளை, முகிழ்த்தகம், திருவெற்றியூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக கொடுக்கலாம். இதேபோல் 12ம் தேதி வட்டாணத்தில் நடைபெறும் இதில் வட்டாணம், பனஞ் சாயல், கொடி பங்கு ஊராட்சி மக்கள் பயன் பெறலாம். இன்று புதுப்பட்டினத்தில் நடைபெறம் முகாமில் காரங்காடு, முள்ளிமுனை, புதுப்பட்டினம் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
The post நம்புதாளையில் ஆக.8ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.
