நாகர்கோவில், ஜூலை 16: கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் 11வது மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரவீந்திரதாஸ் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணை செயாளர் ஷோபா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு பொருளாளர் இந்திரா வரவேற்றார்.
சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஐடா ஹெலன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சந்திரகலா, துணைத்தலைவர் பச்சைமால், சிஐடியு மாவட்ட துணை தலைவர் அந்தோணி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில், தையல் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலானர்களுக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவது போன்று அனைத்து பணபலன்களை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு தையல் தொழிலாளர் வாரியத்திற்கு மாநில அளவில் முத்தரப்புக்குழு அமைத்திட வேண்டும். ஓய்வூதியம் பெறும் தையல் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும்.
வீடு இல்லாத தையல் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் வழங்க வேண்டும். விபத்து மரணம் ரூ.2 லட்சம், இயற்கை மரணம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். தையல் கலைஞர் நல வாரியத்திற்கு தனி நிதி உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கணவனை இழந்த 23 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
The post கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் தையல் தொழிலாளர்களுக்கு அனைத்து மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல் பணபலன்களையும் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.
