×

பழுதடைந்த நிழற்குடையால் விபத்து அபாயம்

 

பந்தலூர், ஜூலை 16: கல்லிச்சால் பழங்குடியினர் காலனியில் பழுதடைந்த பயணிகள் நிழற்குடையால் விபத்து ஏற்படும் முன் அதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி, கல்லிச்சால் பழங்குடியினர் காலனி பகுதியில் பொதுமக்கள், மாணவர்கள், கூலித்தொழிலார்கள் நலன் கருதி பேருந்து வசதிக்காக கடந்த பல ஆண்டுக்கு முன்பாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. நீண்ட நாட்கள் ஆன நிலையில் தற்போது நிழற்குடை உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு உள்ளது.

நாளுக்கு நாள் மோசமாக காணப்படுவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நின்று பேருந்துகளில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழுதடைந்த நிழற்குடையால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Kallichal tribal colony ,Kallichal ,Cherangode ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...