மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

 

கோவை, ஜூலை 16: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமையில் நிர்வாகிகள் காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் வீனஸ் மணி, கோவை போஸ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காந்தகுமார் வரவேற்றார். இதையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், குருசாமி, வசந்த், ராம்நகர் சீனிவாசன், செல்லப்பா, சச்சின் சிவக்குமார், பட்டம்மாள், ஜேம்ஸ்குமார், சக்திவேல், அனீஸ், செல்வராஜ், அஸ்மத், நாராயணன், சிவபெருமாள், ஜமால் முஸ்தபா, மெட்டல் சலீம், மோகன்ராஜ், சுந்தரம், பூபதி, மதுசூதனன், சிற்பி ராதாகிருஷ்ணன், வெங்கடேஷ், தினகரன், பரிதா, அனிதா, தம்பு, ராமகிருஷ்ணன், சின்னச்சாமி, செந்தில், கோவை பிரிட்டோ, பெரியசாமி, சம்பத், பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: