×

கோயில் வளாகத்தில் பூக்கடைகள் அகற்றம்

 

ஈரோடு, ஜூலை 16: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் முன், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த பிளக்ஸ் பேனர்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதன் கோயில் வளாகத்தில், 13 பூக்கடைகள் இருந்தன. இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், நேற்று முன்தினம் இரவு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் வழியாக மீனாட்சி சுந்தரனார் சாலைக்கு வர முயன்றுள்ளார்.

அப்போது, கோயில் வளாகத்தில் உள்ள பூக்கடையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் ஒன்று, பார்த்தசாரதி மீது விழுந்தது.இதில் லேசான காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் உரிய சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள பூக்கடைகளை அகற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்தார். அதன்பேரில், ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதன் கோயில் வளாகத்தில் இருந்த 13 பூக்கடைகள் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

The post கோயில் வளாகத்தில் பூக்கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Fort Aruthra Kapaleeswarar Temple ,Fort Aruthra Kapaleeswarar ,Kasthuri Aranganathan ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...