- ஈரோடு
- அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம்
- ஈரோடு ரயில் நிலையம்
- யூனியன்
- பைரோஸ் ரஹ்மான்
- பிராந்திய செயலாளர்
- சிவகுமாரின்
- தின மலர்
ஈரோடு, ஜூலை 16: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க கிளை செயலாளர் பிரோஸ் ரஹ்மான் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில், பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். பணி நேரத்தில் மட்டுமே பணி செய்ய அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்கள் உரிமையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் ரயில் டிரைவர்கள் (லோகோ பைலட்) பலர் கலந்து கொண்டனர்.
The post ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

